கமல்ஹாசன் தன் கட்சிக்காக வெளியிட்ட ‘மையம் விசில்’

175

கமல்ஹாசன் இன்று தன் கட்சிக்காக ‘மையம் விசில்’ என்ற மொபைல் ஆப் வெளியிட்டார். அதன் மூலம் நாட்டில் நடக்கும் குற்றங்களை புகைப்படம் எடுத்து மக்கள் அனுப்பும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கமல் வெளியிட்டுள்ள வீடியோவில் “காற்றை கெடுத்தார்கள், ஆற்றையும் கெடுத்தார்கள். தண்ணீர் ஓடினால் அது வெறும் ஆறு, சாயம் மட்டும் ஓடினால் அது சாக்கடை. வண்டி ஓட வேண்டிய இடத்தில் மழை தண்ணீர் ஓடுகிறது, மரம் இருக்க வேண்டிய இடத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதுபோன்ற ஆயிரம் பிரச்னைகள், அநீதிகள், அக்கிரமங்கள், அநியாயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறது.”

இந்நிலையில் கமல் ஆப் வெளியிட்டு கொஞ்ச நேரம் கழித்து ரஜினியின் மகள் சௌந்தர்யா போட்டிக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் ஆப் லிங்கை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

SHARE