நடிகை ரச்சிதாவின் அடுத்த சீரியலில் யோடியாக அவரது கணவர்

263

உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாக தமிழ் சினிமா மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரச்சிதா. இவர் நடித்து சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவ்வப்போது இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்கிற பேச்சும் அடிபடுகிறது. இந்த நேரத்தில் நடிகை ரச்சிதா அவருடைய அடுத்த சீரியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நானும் என் கணவரும் இணைந்து ஒரு புது சீரியல் நடிக்க இருக்கிறோம்.

தற்போதைக்கு இது மட்டும் தான் கூற முடியும், என்ன சீரியல் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பதை பொறுமையாக அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன் நடிக்க பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் ஹிட் சீரியலாகும்.

SHARE