அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சாலைகள், பொது இடங்கள் என ரசிகர்கள் அவருக்கு வைத்த போஸ்டர், பேனர்களை பரவலாக காணமுடிகிறது. பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் TAG போட்டு ட்ரண்டிங்கில் வரவைத்துவிட்டார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் அஜித்க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு விட்டனர். விஷமிகள் என் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்து இப்படி செய்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
இது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.