ரஷ்யாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி கிறிஸ்டினா பிமெனோவா சூப்பர் மொடலாக பல ஆண்டுகளாக வலம் வருகிறார்.
மாஸ்கோவில் கால்பந்து வீரரான தந்தைக்கும் மொடல் அம்மாவுக்கும் பிறந்த கிறிஸ்டினா பிமெனோவா என்ற சிறுமிக்கு 3 வயதிலேயே மொடலாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து மொடலிங்கில் தொடர்ந்து கலக்க தொடங்கிய கிறிஸ்டினாவிற்கு தற்போது 9 வயது தான் ஆகின்றது.
இந்நிலையில் இந்த இளம் வயதில் அவர் 20, 30 வயதாகும் மொடல்களைப் போல புகழின் உச்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மொடலுக்குரிய மேக்-அப், ஒர்க் அவுட், சிகை அலங்காரம் என எதுவும் செய்து கொள்ளாமலேயே கிறிஸ்டினா உலகின் மிக அழகான மாடலாக வலம் வருகிறார்.
இணைய உலகில் பிரபலமாக இருக்கும் இவருக்கு, ஃபேஸ்புக்கில் 20 லட்சம் விசிறிகள் இருக்கிறார்கள்.
மேலும், இவரது தாய் இத்தனைப் புகழோடு இருக்கும் தன் மகளைக் கண்டு பெருமிதம் கொண்டாலும், குழந்தை என்றும் பாராமல், ஆண்கள் மிக மோசமான கருத்துகளை அவரது ஃபேஸ்புக்கில் பதிகிறார்கள் என்ற கவலையும் இருக்கிறது.