உடலிலேயே அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் எளிதில் எவ்வாறு கரைப்பது என்பது குறித்து இங்கு காண்போம்.
உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் ஆகியவற்றால் நமது உடலில் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகம் சேர்கிறது.
மேலும், தொப்பை உருவாவதற்கான இதர காரணங்கள் குறித்தும், தொப்பையை வேகமாக கரைக்க உதவும் பானம் குறித்து இங்கு பார்ப்போம்.
தொப்பை உருவாவதற்கான காரணங்கள்
ஒயின், பீர் போன்ற மது பழக்கம் உள்ளவர்களுக்கு தொப்பை உண்டாகும். ஏனெனில், இவற்றை தொடர்ந்து குடிப்பதனால் செரிமானப் பிரச்சனை உண்டாகும். இதனால் கலோரி அதிகரித்து தொப்பை உருவாகும். மது குடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு தொப்பை உருவாவது இயற்கை தான். எனவே, மசாஜ் அல்லது சிறிய உடற்பயிற்சிகள் மூலம் அவர்கள் தொப்பையை குறைக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றிட வேண்டும்.
தூக்கமின்மையும், மன அழுத்தமும் தொப்பையை உருவாக்கும் மற்றொரு காரணிகள் ஆகும். எனவே, இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் குறைந்தது எட்டு மணிநேரம் தூங்க வேண்டும். மேலும், காபி மற்றும் டீ அதிகப்படியாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஹார்மோன் மாற்றங்களாலும் தொப்பை உருவாகும். இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது மற்றும் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம்.
கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், செரிமானப் பிரச்சனையால் உண்டாகும் தொப்பையை குறைக்கலாம். அத்துடன் உடற்பயிற்சியும் அவசியம்.
தொப்பையை குறைக்க உதவும் அற்புத பானம்
100 கிராம் ப்ளம்ஸ் பழங்கள் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ப்ளம்ஸை துண்டுகளாக நறுக்கி, காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மூடி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விட வேண்டும்.
பின்னர், ஒரு வாரம் கழித்து அதனை வடி கட்டினால் கொழுப்பை கரைக்கும் பானம் தயாராகி விடும்.
இந்த பானத்தை தினமும் காலையில், வெறும் வயிற்றில் ஒரு தம்ளர் அளவு குடித்து வர வேண்டும். இதன்மூலம், விரைவில் தொப்பை குறையும்.
அத்துடன், ப்ளம்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
மேலும் உடலை பாதுகாத்தல், புற்றுநோய் அபாயத்தை குறைத்தல், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளுதல் போன்ற பல நன்மைகளும் இந்த பானம் மூலம் கிடைக்கும்.