கிராமத்தை தத்தெடுத்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

193

தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமசபை கூட்டத்தில் அந்த கிராமத்தை தத்தெடுத்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அக்கிராமத்தில் வழக்கம் போல இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய கமல்ஹாசன், அதிகத்தூர் அரசுப் பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித் தரப்படும் எனவும் அதிகத்தூரில் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்து அந்த கிராமத்தை தத்தெடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களுக்கு உதவவில்லை எனவும், மக்களின் ஆதரவு இருந்தால் 12 ஆயிரம் கிராமங்களை எங்களால் தத்தெடுக்க முடியும் எனவும் கூறினார்.

SHARE