செரிமானப் பிரச்சனையை போக்கும் வீட்டு மருத்துவம்

178

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் செரிமானப் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

நேரம் தவறி சாப்பிடுவது, எண்ணெய் பலகாரங்கள், மசாலா பொருட்களின் விளைவால் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் அவதிப்படுகிறோம்.

போதிய உடல் உழைப்பு இல்லாததும், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதும் கூட இதற்கு காரணமாகிறது.

இப்பிரச்சனைக்கு நம் வீட்டில் உள்ள அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களை கொண்டே மருந்து தயாரிக்கலாம்!

தேவையான பொருட்கள்
  • சுக்கு
  • மிளகு
  • திப்பிலி
  • ஏலக்காய்
  • சீரகம்

இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும், இந்த பொடி அரை டீஸ்பூன், பனங்கற்கண்டு அரை டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து இறக்கவும்.

உணவு சாப்பிட்ட அரை மணிநேரத்துக்கு பின்னர் இதை குடித்தால் வயிற்று உப்புசம், புளிச்ச ஏப்பம் சரியாகும், செரிமானமும் சீராக இருக்கும்.

பசியைத் தூண்டும் மருந்து

நெல்லிக்காயை பசையாக அரைத்து, அதிலிருந்து சாறு எடுக்கவும்.

இதனுடன் இஞ்சி சாறு, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து பாகுபதத்தில் எடுக்கவும், இதை ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இந்த பாகு ஒரு பங்குக்கும், 3 பங்கு நீரும் சேர்த்து குடித்துவர செரிமானப் பிரச்சனை, புளிச்ச ஏப்பம், வயிற்று உப்புசம் ஆகியவை குணமாவதுடன் பசியும் தூண்டப்படும்.

SHARE