திருமணம் குறித்து நடிகை கௌசல்யா கூறிய தகவல்

296

தமிழில் 90களில் பல ட் படங்களை கொடுத்தவர் நடிகை கௌசல்யா. 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத இவர் விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து நடிகை கௌசல்யா ஒரு பேட்டியில், நான் திருமணத்திற்கு தயாராகி வருவதாக வந்த தகவல் எதுவும் உண்மை இல்லை. இந்த வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எனக்கு 38 வயதாகிறது, இன்னும் சிங்கிளாக இருக்க ஆசைப்படுகிறேன். கல்யாணம் செய்துகொள்ள ஆர்வம் உண்டு, ஆனால் அதற்கு இன்னும் நேரம் வரவில்லை, கொஞ்ச காலம் கழித்து நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்று பேசியுள்ளார்.

அதோடு தன்னுடைய திருமண செய்தி தகவல்களை பார்த்து முதலில் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

SHARE