நாவற்பழம் பல நோய்களுக்கும் சரும பிரச்சினைகளுக்கும் அருமருந்தாகும்.
நாவல் பழத்தில் வேர் முதல் கொட்டை வரை அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது.
இருப்பினும் நாவல்பழத்தை அளவோடு சாப்பிடவேண்டும். அதிகமாக சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.
நாவற்பழத்தின் பயன்கள்
- நாவல்பழக் கொட்டையை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, தண்ணீர் மற்றும் பாலில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.
- நாவல் பழம் இயற்கையாகவே இரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படுகிறது.
- இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
- கண் பார்வையைத் தெளிவாக்கும்.
- சிறுநீரகக் கற்களையும் இது இருந்த இடம் தெரியாமல் கரைத்துவிடும்.
- நாவல் பழ கொட்டையின் பவுடர் உடன் பால் கலந்து தடவி வர முகப்பருவை போக்கும்.
- இதன் சாறு நினைவாற்றலை அதிகரிக்கப் பயன்படுகிறது.
- ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது
யார் சாப்பிடக்கூடாது?
- அறுவை சிகிச்சைக்குப் போகும் நோயாளிகள் இந்த பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இல்லையேல் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். பிறகு லோ சுகராகிவிடும்.
- வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- பால் சாப்பிடுவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- இந்த பழத்தின் மூலம் ஏற்படும் கரை விரைவில் போகாததால் கவனமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின் பல் துலக்குவது நல்லது.