1961ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி இலங்கையில் coca – cola வை அறிமுகப்படுத்திய போது அது இலங்கை மக்களின் அபிமானத்தைக் கைப்பற்றியது. அன்று முதல் எமது தேசத்தால் அதிகம் விரும்பப்படும் குடிபான வகைகளுள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
coca – cola தமது வர்த்தகக் குறியை அறிமுகப்படுத்திய பின்னர் ஏனைய சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தக நாமங்கள் உள்ளடக்கப்பட்டன. coke Light, Sprite, Fanta Orange, Fanta Portello Fanta Cream Soda Lion Soda and Lion Ginger Beer போன்றவையே அவை.
இதன் மூலம் இலங்கையிலுள்ள நுகர்வோரின் தாகத்தை தீர்த்ததுடன் பல்வேறு சுவைத் தெரிவுகளைக் கொண்ட குளிர்பானங்களை வழங்கினர். எந்தவொரு கொண்டாட்டத்திலும் அவசியம் இருக்க வேண்டியதொன்றாகவும் பல தெரிவுகளைக் கொண்ட புத்துணர்ச்சியூட்டிடும் குடிபான வகைகளைக் கொண்டுள்ள ஓர் வர்த்தக நாமமாகவும் விளங்குகிறது.
இலங்கையில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களது கேள்விக்கேற்ப ஸ்பார்க்ளிங் மற்றும் பழச்சுவையூட்டப்பட்ட பானங்களில் சீனியற்ற தெரிவினையும் வழங்கியது. 2017 ஆம் ஆண்டு coke Zero மற்றும் Sprite Zero அறிமுகப்படுத்தப்பட்டதுடன்Fanta, Portello, Cream Soda,Lion Ginger Beer என்பவையும் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் நுகர்வோருக்கு இயற்கைச் சுவைகளில் மற்றும் சுவையூட்டப்பட்ட பழப் பானங்களில் சீனியற்ற தெரிவுகளையும் அறிமுகப்படுத்தியது. இது இயற்கையான சுவைகளிலும் பழச்சுவைகளிலும் குறைந்த கலோரியுடன் இக்குடிபான வகைகளை சுவைத்திட வழிவகுத்தது. அவர்களது குடிபான தெரிவுகளில் இலங்கை மக்களுக்கு முதலாவது சீனியற்ற குடிபானவகைகளை வழங்கிய பெருமை coca – cola Beverages Sri Lanka Ltd க்கே உள்ளது.
