இன்றைய ராசிபலன்

179

 

 

measam

 

மேஷம்: உற்சாகமான நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கப்பெறும்.
rishabam

 

ரிஷபம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
midhunam

 

மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே நடைபெறும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
kadagam

 

கடகம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும், பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.
simmam

 

சிம்மம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
kanni

 

கன்னி: பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அதிகாரிகள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
thulam

 

துலாம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், கிடைத்துவிடும். உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் அதனால் பாதிப்பு இருக்காது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கும்.
viruchigam

 

விருச்சிகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். சக பணியாளர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
          dhanush

 

தனுசு: இன்று மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் எதிர்பாராத வகையில் சில பிரச்னைகள் ஏற்படலாம். பொறுமையுடன் எதிர்கொண்டால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
magaram

 

மகரம்: உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு மகிழ்ச்சியில் தரும். அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.
kumbam

 

கும்பம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
meenam

 

மீனம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்..பொறுமையைக் கடைப்பிடித்தால் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

 

SHARE