வில் போன்ற புருவங்கள் வேண்டுமா? இதோ இயற்கை வழி

164

vilampazam_beauty_tips

புருவங்கள் வில் போன்று வளைந்து நீளமாக இருந்தால் பேரழகியாகக் காட்சியளிப்பீர்கள். இதோ பராமரிப்பு டிப்ஸ்

ஒரு டீஸ்பூன் வெங்காய ஜூஸ், அரை டீஸ்பூன் தேன் (கலப்படம் இல்லாதது) இதை கலந்து இரவு உறங்கும் முன் நிதானமாக புருவங்களில் தடவி, காலையில் கழுவிவிடவும்.

அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், கால் டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், இரண்டையும் நன்றாகக் கலந்து புருவங்களில் தடவி வரவும். கொஞ்சம் மஸாஜ் ச்செய்து கொள்வதும் நல்லது. கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

SHARE