இதய நோய்களுக்கும் முட்டைக்கும் உள்ள தொடர்பு

211

நாள் ஒன்றிற்கு ஒரு முட்டை வீதம் உண்பதால் இதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் மிகவும் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆப்பிள் பழங்கள் சாப்பிடுவதால் இதய நோய்கள் நெருங்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஆப்பிளை விடவும் விலை குறைந்த முட்டை சால சிறந்தது என சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இரத்த குழாய்கள் சார்ந்த நோய்களையும் தடுக்கும் குணம் முட்டைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக சீனாவில் 10 வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் சுமார் கால் மில்லியனிற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 30 வயதிற்கும் 79 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் இந்த ஆய்வுக் குழுவில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆய்வாளர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE