மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமானால் ரெலோ, புளோட், ஈபிஆர்எல்எப் போன்ற இயக்கங்கள் தமிழினத்தை மீண்டும் காட்டிக் கொடுப்பார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இவ் ஆயுதக்குழுக்கள் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறு இருக்க கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பதினேழு ஆசனங்களை வடகிழக்கில் வலுவான ஒரு சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. எதிர்க்கட்சி ஆசனத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளது. தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளோட் போன்ற கட்சிகளின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். இதில் கஜந்திரகுமார் பொன்னம்பலமுடைய தமிழ்த் தேசியமக்கள் முன்னணியும் ஆனந்தசங்கரியினுடைய தமிழர் விடுதலைக்கூட்டனியும் பல்வேறு காரணங்களுக்காக இணைத்துக்கொள்ளப் படவில்லை. இவைகள் தமது கட்சியை தனியாக வழிநடத்திச் செல்கின்றனர். தற்பொழுது ஈபிஆர்எல்எப் இன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு பராளுமன்றத்தின் ஆசனம் கிடைக்கப்பெறாத காரணத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறானது என்று கூறி குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் கோஷங்களையும் திறைமறைவில் இருந்து செயற்படுத்தி வருகின்றார்.
இவருக்கு ஆதரவாக கஜேந்திரகுமர் பொன்னம்பலமும், ஆனந்தசங்கரி அவர்களும் செயற்பட்டு வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பத்து வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு வந்த சுரேஸ்பிரேமச்சந்திரன் அக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலையில் வைத்து ஆடினார். அப்போது அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராகவும் செயற்பட்டார்.
தற்பொழுது பாராளுமன்ற ஆசனம் பறிபோன நிலையில் அவரின் இடத்திற்கு சுமந்திரன் அவர்கள் செயற்பட்டு வருகின்றார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் தமிழ் மக்களை உசுப்பேத்துகின்ற இந்தக் ஆயுதக்கட்சியின் தலைவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். நீங்கள் இந்த அரசாங்கத்துடன் மற்றுமொரு போருக்கான நடைமுறையையே செயற்படுத்துகின்றீர்கள் என்று. தமிழினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை இறுதிவரை நின்று காட்டிக் கொடுத்த இவ் ஆயுதக்கட்சிகள் எந்த முகத்தைக் கொண்டு மீண்டும் தமிழினத்தைக் காப்பாற்றுகின்றோம் என்ற போர்வையில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அப்பாவி இளைஞர் யுவதிகளை மீண்டும் பலிக்கிடாய் ஆக்க விரும்புகின்றீர்களா? புத்த துறவி ஒருவர் எழுக தமிழ்ப் பேரணியை எதிர்த்து வவுனியாவில் வந்து தனது சகாக்களுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திவிட்டுச் சென்றிருக்கின்றார். இவரை எதிர்க்க வக்கில்லாத நீங்கள் மீண்டுமொரு முறை எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராட் போகின்றீர்கள். தேசியம் சுயநிர்ணய உரிமை என்று நீங்கள் பேசுவதாக இருந்தால் விடுதலைப்புலிகளுடைய ஆயுதப் போராட்டம் மௌனித்த கையோடு உங்களது அரசியல் ஆயுதப்போராட்டங்கள் அரசுக்கு ஏதிராக திருப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அதனைச் செயற்படுத்த உங்களால் முடியாமல் போனதற்கு காரணம் என்ன அன்று அரசாங்கத்துக்கு விசுவாசமாக நன்றியுள்ள நாய்களாக செயற்பட்டதன் விளைவே இன்று உங்களது அரசியலை தனியே நின்று கொண்டு செல்லமுடியாத துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியை தனியே விட்டு விட்டு ஏனைய மூன்று ஆயுதக்குழுக்களும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது என்ன தெய்வக்குற்றமா? உங்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற பயம் உங்கள் கட்சித் தலைவர்களுக்குள்ளேயே இருக்கின்றது. கூட்டமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு கூட்டமைப்பை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவது இக்கட்சிகள் விடும் பெரும் தவறு என்பதைச் சுற்றிக்காட்ட விரும்புகின்றோம்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் மட்டக்களப்பில் துரைரட்ணம் தலைமையில் இராணுவத்தின் ஒட்டுக்குழுக்கலாக ஈபிஆர்எல்எப் செயற்பட்டு வந்தது. ரெலோ தலைமையில் ஆரையம்பதி வரதன் இராணுவ ஒட்டுக்குழுவாகச் செயற்பட்டார். புளோட் சித்தார்த்தன் தலைமையிலான அணியினர் நேரடியாகவே அரசாங்கத்தின் கைக்கூலிகளாக இறுதிவரை செயற்பட்டனர்.
இவ் ஆயுதக்குழுக்களை ஜனநாயகவழியில் உள்ளே சேர்த்துக்கொண்ட பொறுப்பு இந்திய அரசாங்கத்தையே சாரும். இன்று சர்வதேச ரீதியாக அரசியலை அணுகவேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் என்ற விடையத்தில் பொறுமை காக்கவேண்டிய தேவை இருக்கின்றது. இதே நேரத்தில் இவ் ஆயுதக்கட்சிகளை நம்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதன் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் கிடைக்காமல் போகும் நிலமையே தோற்றுவிக்கப்படும். தேர்தல் காலத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி என்று கூறிக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது இவ் ஆயுதக்கட்சிகளின் பிழைப்பாகப் போய்விட்டது. ஒரு வேளை இந்த ஆயுதக்கட்சிகள் இணைந்து எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யப்படுமாக இருந்தால் ரெலோக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியின் காலைப் பிடித்துக்கொண்டு நிற்கும் நிலை ஏற்படும். ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கூட்டமைப்பாக பதிவு செய்வதற்கு சம்மதிப்பார்கள் அதிலும் புளொட் சித்தார்த்தனுடைய நிலமை கவலைக்கிடமே. இக்காலகட்டத்தின் பொழுது புளொட் அமைப்பின் தலைவர் லிங்கநாதன் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலக்கப்படுவார். கட்சி பதிசெய்யப்படவேண்டும் என்ற விடையத்தில் ஈபிஆர்எல்எப் கட்சியே அன்றும் இன்றும் முன்நிற்கின்றது.
ஆனால் இக்கட்சி பதிவு செய்யும் விடையத்தில் ஆயுதக்கட்சிகளின் தலைவர்களைக் கேட்கின்ற பொழுது ஆழுக்கு ஆல் குறை கூறுகின்றார்கள். இது இவ்வாறு எனின் இறுதிவரை தமிழரசுக் கட்சி போடுகின்ற இறைச்சித் துண்டையே இனி கௌவ்வுவோம் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலமை மாற்றப்படவேண்டும். கடந்த கால வரலாற்றைப் பார்க்கின்ற பொழுது ஆயுதக்கட்சிகள் ஒரே நேர்கோட்டில் பயணித்தன. மாறி மாறி வந்த அரசாங்கத்தினாலும், சர்வதேச நாடுகளின் தலையீட்டினாலும் இந்த நாட்டில் சகோதரப் படுகொலை இடம்பெற்றது. தமிழினம் சிங்கள அரசைத் தோற்கடித்து இந்த நாட்டை இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கைப்பற்றும் சூழ்நிலையே தற்பொழுதும் உள்ளது. குறிப்பாக சர்வதேச நாடுகளின் தலையீட்டில் குறிப்பாக இந்தியா, சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு கைகொடுக்காமல் இருக்குமாக இருந்தால் தமிழீழம் வெல்வது உறுதி. சிங்களவர்கள் கோளையர்கள் தமிழினத்தோடு தனித்துப்போராடிய வரலாறு இல்லை. இதற்கு மாறாக தமிழினத்தை வைத்து தமிழினத்தையே அழித்த வரலாறே உள்ளது. துரையப்பா முதல் கருணாவரை எட்டப்பன் கூட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மீண்டும் தமிழினத்தை நோக்கிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் பல்லுப்புடுங்கிய பாம்பாக இருக்கும் இவ் ஆயுதக் கட்சிகள் மீண்டும் புத்துயிர் பெறும். கொலை, கொள்ளை கற்பழிப்பு என்று இவர்கள் அராயகம் செய்து பிழைத்து விடுவார்கள். இவ்வரலாறே கடந்த காலங்களில் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும், மலையகத்திலும் இடம்பெற்றது. தொடர்ந்தும் சம்பந்தன் தலைமையானது தமிழ் மக்களுக்கு ஒரு ஏமாற்றத்தைத் தந்தால் அடுத்து வருகின்ற ஒரு இளைஞர் சமூதாயமானது ஏதொவொரு வகையில் இந்த தமிழினத்தை மீட்டெடுக்கும். அரசியல் என்பது காலத்துக்கு காலம் மாறுபடும். சம்பத்தனை ஓரம் கட்டுவதாக இருந்தால் இலங்கையில் இருக்கக் கூடிய ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும், சர்வதேச தலைமைகளும் அதனைத் தீர்மாணிக்கும். ஓவ்வொரு தலைமைகளும் முன்னோக்கிச் செல்லச் செல்ல அவர்களின் செயற்பாடுகள் மறைக்கப்பட்டு அக்காலகட்டத்தில் உருவாக்கம் பெறுகின்ற அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள். இதில் சம்பந்தனின் கதிரைக்கு விக்கினேஸ்வரனும், பிரதி குழுக்களின் தலைமைக்கு இன்னொடு கட்சியும், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்கு ஏனைய அரசியல் தலைவர்களும் மக்களைப் பகடக்காய்களாகப் பயன்படுத்தி அரசியல் தலைமைகளைக் கொலை செய்து தனது அரசியல் நிலைநிறுப்பை உறுதி செய்வதற்கு செயற்படுவார்களே ஒழிய இவர்கள் தமிழ் மக்களின் நலனின் அக்கறை கொண்டு செயற்படுவார்களாக இருந்தால் தமிழீழம் எப்போ கிடைத்திருக்கும். வழையடி வாழையாக இவர்களது அரசியல் தொடர்வதன் காரணமாக இதனை முன்னெடுக்க முடியாமல் போகின்றது. ஆயுதம் ஏந்திப் போராடுவது தான் ஒரு வழி என்று மீண்டும் தமிழீழம் உணர்த்தப்படுமாக இருந்தால் கடந்த கால வரலாற்றுப் பிழைகளை நிறைவு செய்து கொண்டு ஒரு குடையின் கீழ் நின்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் இதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். தற்பொழுது கூட்டரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்கு ஒரு அவகாசத்தை வழங்கவேண்டியதன் தேவை தற்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. கூலிக்கு மாரடிக்கின்ற அரசியல் வாதிகள் இதனை உணர்ந்து செயற்படவேண்டும்.
நெற்றிப்பொறியன்