பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்

177

சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் அலோசியஸிடம் எவரேனும் பணம் பெற்றுக் கொண்டிருந்தால் அது பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பணம் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

SHARE