யாழ்ப்பாணத்தில் மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

179

யாழ்ப்பாணத்தில் மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாவந்துறை வடக்கைச் சேர்ந்த 44 வயதான ஜோன் மல்கன் விமல், 35 வயதான செபமாலை அலெக்ஸ், 30 வயதான மகேந்திரன் ரூபன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போயுள்ளது.

கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதால் எதுவும் அனர்த்தம் நேர்ந்திருக்கலாம் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை தேடுவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸார், கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாகதீபத்திலுள்ள கடற்படை முகாமிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் இன்றைய தினம் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

SHARE