யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை

168

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனைக்கோட்டை சாவற்கட்டைச் சேர்ந்த 35 வயதான க.விஜயா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகள் இல்லை என்ற மன உளைச்சல் காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்டுக் குளியலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனினும் அதன் வலியை தாங்க முடியாமல் வீட்டுக்குள் ஓடிச் செல்ல அவரது தாயார் தீயை அணைத்துள்ளார். உடனடியாகவே யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தார். எனினும் சிகிச்சை பயனளிக்காது அவர் நேற்று உயிரிழந்தார்.

தமக்குப் பிள்ளை இல்லையே என்று அவர் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இந்தியாவுக்குச் சென்று தீர்வு பெறலாம் என்று அவரது கணவன் கூறியிருந்த நிலையில் இப்படி நடந்துள்ளது. மனைவியின் தவறான முடிவு குறித்து கணவன் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணையை மேற்கொண்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

SHARE