ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கனித்தீவு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் வினோதினி (வயது 19) என்பவரின் சடலமும் அவரது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டதா என்ற விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.