இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் கப்பலில் பிறந்த குழந்தை

502

லிபியாவிலிருந்து இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் கப்பலில் பிறந்த ஆண் குழந்தைக்கு மிராக்கிள்(Miracle) என பெயர் சூட்டப்பட்டது.

உள்நாட்டு போர் உட்பட பல்வேறு காரணங்களினால் லிபியாவிலிருந்து நாள்தோறும் அகதிகளாக மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

பெரும்பாலும் ஆபத்தான கடல் பயணங்களையே மேற்கொள்கின்றனர், கடந்த மூன்று நாட்களில் மட்டும் இத்தாலி கடற்படை மற்றும் அதிகாரிகளால் 1800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உதவி கோரி நடுக்கடலில் தத்தளித்த 70க்கும் மேற்பட்டோரை மீட்டு கொண்டு வந்த Aquarius என்ற கப்பலொன்று கேட்டேனியா நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது அங்கிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிதுடிக்க அழகான ஆண் குழந்தை பிறந்தது.

துன்பத்தையும் மறந்து மக்கள் குழந்தையின் பிறப்பை கொண்டாடிய நிலையில், மிராக்கிள் என பெயர் சூட்டப்பட்டது.

குழந்தை 2.8 கிலோ கிராம் எடையில் பிறந்ததாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் அக்கப்பலில் உள்ள மருத்துவ தாதி தெரிவித்துள்ளார்.

மேலும் மீட்பு கப்பலில் பிறந்த ஆறாவது குழந்தை இதுவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE