சோமாலியாவில் நிர்க்கதியாக விடப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

193

சோமாலியாவில் நிர்க்கதியாக விடப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச அகதிகளுக்கான ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக, இதற்கான நடவடிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்க்கதியான 12 இலங்கையர்களும் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE