
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ. 751 கோடி ஆகும். இந்தியளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி, 3-வது இடத்தில் இருக்கிறார். அதுவும் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டோனியின் மதிப்பு இந்தளவிற்கு உயர்ந்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் ரூ.15 கோடி கொடுத்து அணியில் தக்க வைத்துக்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி அதிக விளம்பரங்களில் டோனி கவனம் செலுத்துகிறார்.
சென்னை கால்பந்து அணி, ராஞ்சியில் உள்ள ஹாக்கி கிளப் ஆகிய அணிகளின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டில் உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி 23 வது இடம் பிடித்தார்.
31மில்லியன் டாலர் வருவாய் இவர் ஈட்டியதை அடிப்படையாக வைத்து 23-வது இடத்தில் இருந்தார்.கவாஸாகி நின்ஜா H2, ஹெல்கேட் X132, நின்ஜா ZX-14R, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், யமஹா தண்டர்கேட், டுகாட்டி 1098 என்று மொத்தம் 22 சூப்பர் பைக்குகள் டோனியிடம் உள்ள. இதில் நின்ஜா H2 பைக்கின் ஆன்ரோடு விலை 35 லட்சம்