பூச்சிகளை எதிர்க்கும் பயிர் மரபணு மருந்து

576

பூச்சிகளை எதிர்க்கும் பயிர் மரபணு மருந்து!
.
பூச்சிக் கொல்லி மருந்துகள், பயிர்களுக்கும், சூழலுக்கும் ஏற்படுத்தும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பூச்சிகளுக்கு, பயிர்கள் இரையாகாமல் காப்பாற்ற, தடுப்பு மருந்தைப் போட முடியும் என, பின்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எல்லா தாவரங்களுக்கும், தங்களை தற்காத்துக் கொள்ளும் திறன், அவற்றின் மரபணுக்களிலேயே உண்டு.
இயற்கை அளித்திருக்கும் இந்த திறனை மேலும் அதிகரித்தாலே, தாவரங் களால் பூச்சிகளை விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஹெல்சிங்கி பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

இவர்கள் பிரஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, தாவரங்களின் மரபணுக்களில் இருக்கும் ஆர்.என்.ஏக்களை வைத்து, இந்த பூச்சி எதிர்ப்பு மருந்தை தயாரிக்க முயன்று வருகின்றனர்.

மரபணுக்களில், டி.என்.ஏ அனுப்பும் உத்தரவுகளை சுமந்து செல்பவை, ஆர்.என்.ஏ அமிலங்கள். இதை வைத்து, தாவரங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை துாண்ட முடியும்.

பயிர்கள் பூச்சியை எதுவும் செய்ய முடியாவிட்டாலும், அவை கொண்டு வந்து சேர்க்கும் கிருமிகளை எதிர்த்து வீழ்த்த முடியும்.

ஆர்.என்.ஏ அடிப் படையிலான பூச்சி எதிர்ப்பு மருந்தை, வேதி மருந்தைப் போலவே செடிகளின் மீது தெளித்தாலே போதும் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆர்.என்.ஏ தடுப்பு மருந்தால் தாவரங்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் எந்த கெடுதலும் இருக்காது.

SHARE