இலங்கையில் நிலவும் காலநிலையில் மீண்டும் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாளை முதல் பல பிரதேசங்களில் அடைமழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வழமையை விடவும் வலுவான மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.
மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.