வீட்டுக்கும் ரோட்டுக்கும் அடிகல் நாட்டியவர்கள் இரண்டையுமே செய்யவில்லை  –   திலகராஜ் எம்.பி

188
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் மு.இராமச்சந்திரன்)
பஷில் ராஜபக்‌ஷ வீதி அமைத்துத் தருவார் என வாக்குறுதி வழங்கியவர்கள், கோத்தபாய ராஜபக்‌ஷவை அழைத்து வந்து வீடுகளுக்கு அடிக்கல்லை நாட்டியவர்களுக்கு இரண்டையுமே நிறைவேற்ற முடியாது போனது. இன்று இரண்டையுமே நிறைவேற்றிக்காட்டுபவர் அமைச்சர் திகாம்பரம் என்பதை டயகம பிரதேச மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி  திகாம்பரத்தின் வழிகாட்டலில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டத்திற்கான வீதி புனரமைப்பு மற்றும் தனி வீட்டுத்திட்டம் என்பவற்றின் ஆரம்ப நிகழ்வு 31.05.2018  நடைபெற்றது. இதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திரிகாமத்திற்கு போவது, சந்திர மண்டலத்திற்கு போவதற்கு  ஒப்பானது. ஏனெனில். இரண்டுக்கும் பாதையில்லை. இந்தப் பாதை இதுவரை தாரைக் கண்டதில்லை. இருந்த பாதையும் இவ்வாறு மோசமடைய யார் காரணம். கடந்த ஆட்சிக்காலத்தில் போபத்தலாவை பண்ணைக்குச் செல்லும் இந்த வீதியூடாகவே நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்டு செல்லப்பட்டன. மாட்டு அமைச்சை வைத்திருத்தவர்கள இங்குள்ள மக்களுக்கு மாடுகளை  பெற்றுக்கொடுக்கவுமில்லை. வீடு பெற்றுக்கொடுக்கவுமில்லை. இன்று இரண்டையும் பெற்றுக் கொடுக்க அமைச்சர் திகாம்பரதிற்கு மட்டுமே இயலுமாயிருந்திருக்கிறது. ஆனால், அண்மித்த டயகம, வெவர்லி வட்டாரங்களில் எமது வேட்பாளர்களை இங்குள்ள மக்கள் வெற்றியடையச் செய்யவில்லை. நாம் அவற்றைப் பொருட்படுத்தாமல் அபிவிருத்திப் பணிகளை அனைவருக்கும் பொதுவாக மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
SHARE