நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜெவானி டோர்நியூவாட் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை இன்று (30) காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.




யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்றது. யாழ் கோட்டை உட்பட வடமாகாணத்தில் நெதர்லாந் அரசு மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு ஆறுகள், குளங்கள் நீர் நிலங்களை புனரமைத்தல் கடல் ஏரிகளை செப்பனிடல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயங்களுக்காக நெதர்லாந்து அரசு தொடர்ந்தும் வடமாகாணத்திற்கு உதவி புரியும் என அவர் உறுதியளித்தார்.