சொல்வதை சொல்லி சாவதை விட நாங்கள் செய்வதை செய்து விட்டு சாவதுதான் மேல் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் 

181
இன்று நாம் தழிழர்களாக  ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களின் ஒற்றுமையை உருக்குலைத்து விட்டால் தமிழினமே சிதறுண்டு அடிநாதமே  இல்லாமல்  போய்விடும்
என்பது எமக்கு நன்கு தெரியும் அப்படியாக இருந்தும் எம்மை பிரித்து  எமது இனத்தினை அழிப்பதற்கும் எமது ஒற்றுமையை  சீர்குலைக்க என்று இன்று பல சக்திகள் முயன்றுகொண்டிருக்கின்றன.
தமிழ் மக்கள் பேரவை  ஊடாக இன்னும் ஓர் கட்சி அமைக்க வேண்டும் என்று  கூக்குரல் எழுந்த வண்ணம் இருக்கின்றது . தமிழ் மக்கள் பேரவை என்று உருவாக்கும் போது அது அரசியல் சார்ந்தது அல்ல பொது மக்களுக்கான ஒரு பொது அமைப்பு  என்று தான் கூறப்பட்டது ஆனால் இன்று அதே மேடையில்  அவர்கள் நா கூசாமல் அரசியல் பற்றியும் கட்சிகள் பற்றியும் பேசி தமிழர்களின்  ஒற்றுமையை அழிப்பதற்காக திட்டமிட்டுள்ளார்கள். இது உண்மையில் கவலைக்குரிய ஒர் விடயம்.
  
 இன்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின்  கௌரவ முதலமைச்சராகவே விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் இருக்கின்றார். அவர் அப்படியே தான் இருக்க வேண்டும். ஐயா அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கிய புள்ளியாக ஒரு முக்கிய உறுப்பினராகவே இருக்கின்றார். அவரை சில கூட்டங்கள் ஊருடுவி தமிழர்களின்   ஒற்றுமையை உருக்குலைக்கலாம் என    சிலர் பரிசோதனை  செய்ய முயற்சிக்கின்றார்கள்.
உண்மையில் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எம்முடைய முதலமைச்சர்  எமது தமிழ் தேசிய கூட்டமைப்பில் கௌரவ  முதலமைசச்ராக நாங்கள் விட்ட வழியில் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் உருக்குலைக்கப்பட்டு விட்டால் பண்டார வன்னியன் காலத்தில் காக்கவன்னி எப்படி ஒரு காட்டிக்கொடுத்தவனாக மாறினானோ!! எம்முடைய மேன்மை பொருந்திய தலைவர் வே. பிரபாகரன் காலத்தில் கருனாம்மான்   ஒரு காட்டிக்கொடுத்தவனாக உருவாகினானோ !!! அதனைப்போல் வடமாகணசபையைக் காட்டிக்கொடுத்தவராக எமது விக்னேஸ்வரன் ஐயா பதிவு செய்யப்படுவார்.  அந்த துரோகப்பட்டத்தினை நிச்சயமாக அவர் பெற்றுக்கொள்ளகூடாது என  நான் இவ்விடத்தில் பதிவு செய்கின்றேன்.
இன்று எமது தமிழ் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   அற்ப பணத்திற்காக தமிழ் தேசிய  கூட்டமைப்பினை குற்றம் சாட்டுவதினை  நிறுத்திவிடுவது மிகவும் சிறந்தது.
சொகுசு வார்த்தைகளினை கூறி பாசாங்கு  செய்வதை விட  செல்வதை சொல்லிவிட்டு சாவது மேல் என கௌரவ முதலமைச்சர் ஐயா அவர்கள் கூறி உள்ளார். அது சிறந்தது ஆனால்  நான் சொல்கின்றேன்  நாங்கள் செய்வதை செய்துவிட்டு சாவது தான் மேல் என இவ் இடத்தில் குறிபிடுகின்றேன்.  என   நேற்று  நடை வற்றாப்பளை ம.வி பாடசாலை கலையரங்கம் அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு  உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (வன்னி எம்.பி)  குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
SHARE