வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற மூன்று பயிலுனர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்

202
புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்களை சமூகமயமாக்கும் நிகழ்வு இன்று (31) வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது.
வவுனியா புனர்வாழ்வு இணைப்பு செயலகத்தின் பொறுப்பதிகாரி கேணல் சமிந்த பஸ்குவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கேணல் அசாட் ஸ்செடில் மற்றும் கல்வியல் கல்லூரி பீடாதிபதி கே.சுவர்ணராஜா  ஆகியோர் கலந்துகொண்டு பயிலுனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
  
  
  
  
  
  
  
புத்தளம்,மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று பயிலுனர்கள் ஒரு வருடகாலம் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் இன்றையதினம் சம்பிரதாய பூர்வமாக அவர்களின் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சர்வமத குருமார்களின் ஆசியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் அண்ணா நகர் தமிழ் வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.
புனர்வாழ்வு பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பயிலுனர் எ.நகுலேஸ்வரன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் கேணல் சமிந்த கொஸ்வேல்ட், கேணல் கேமன் பெனாண்டோ, பூந்தோட்ட கல்வியல் கல்லூரியின் வளவாளர் எஸ்.பார்த்தீபன். புனர்வாழ்வு பெற்றவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
SHARE