கொழும்பு, புதுக்கடையில் இன்னுமொரு நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை

191

கொழும்பு, புதுக்கடையில் இன்னுமொரு நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

வத்தளை நீதிமன்றத்தின் புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தற்போதைய உச்சநீதிமன்றக் கட்டிடத் தொகுதி வேறிடத்துக்கு மாற்றப்படும். அதே போன்று புதிதாகவும் ஒரு நீதிமன்றக் கட்டிடத் தொகுதி உருவாக்கப்படும். இதன் மூலம் வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்படுவதை தவிர்க்கலாம்.

நீதிபதிகளின் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

SHARE