மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

181

நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் மரக்கறி பயிர்ச்செய்கையில் தாக்கம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பை காட்டியுள்ளது.

இந்த விலையேற்றமானது சில நாட்களுக்கு தொடலாம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், ஒரு கிலோகிராம் நிறையுடைய கரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் என்பவை நேற்று 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE