ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல்

194

(டினேஸ்)

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் திருகோணமலை சட்ட ஆலோசனை மன்றத்தின் கலந்துரையாடல் மண்டபத்தில் மாவட்ட இணைப்பாளர் பன்னீர்விழிச்செல்வம் சர்மிலா தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மனித உரிமைக்கும் பாதுகாப்புக்குமான சட்ட உதவி மையத்தின் தலைவர் அருட்தந்தை யோகேஸ்வரன் நிறுவனத்தின் இலங்கை கிளைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.டிலான் பொது முகாமையாளர் ரீ.சுகிர்தரன் இளைஞர் மற்றும் மகளீர் பிரிவிற்கான இணைப்பாளர் எம். மனோரஞ்சினி உள்ளிட்ட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அங்கத்தவர்களின் அறிமுகம் நிறுவனத்தின் செயற்திட்ட அறிமுகம் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

பின்னர் புதிய அங்கத்தவர்கள் நிறுவனத்தில் இணைத்துக் கொள்வதற்கான படிவங்கள் உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கப்பட்டதுடன் அங்கத்தவர்களின் கருத்துப்பகிர்வும் இறுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE