பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள்

186

தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு வரை இந்த பணிப்புறக்கணிப்பு தொடரும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் காரணமாக தபால் சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE