
நல்லாட்சி அரசாங்கம் இன்னும் சில காலம் நீடித்தால் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, முழு நாட்டு மக்களும் கழுத்தில் தூக்குக் கயிறைப் போட வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் வந்தால் ஊடகவியலாளர்கள் கழுத்தில் கயிறைப் பொட்டு தொங்க வேண்டி ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
மல்வத்து மகா விகாரை வளாகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்துக்கு ராஜபக்ஷாக்கள் மீது மிகுந்த பயம்காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்துக்கு எதனையும் செய்து கொள்ள முடியாமல் போயுள்ளது. அமைச்சர்கள் ஊடகத்தின் முன்னாள் கூறும் கருத்துக்கு ஒரு பெறுமதி இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் அறிவித்தார். (மு)