இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் தாயாரின் வீட்டில் ஏற்பட்ட அனர்த்தம்

190

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் தாயாரின் வீட்டில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு 7 குருந்துவத்தை, கெப்பட்டிபொல மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் தீப்பற்றியமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

எனினும் இந்த தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

SHARE