ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்களில் மேற்கொள்ளப்படும் :ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

160

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்களில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் ஜனாதிபதி இதனை நேற்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கட்சி மறுசீரமைப்பு நோக்கில் தற்காலிக அடிப்படையில் கட்சியின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக அதிகாரிகளை கொண்டு 45 நாட்களில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் பூர்த்தியாக்கப்படும்.

கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய துமிந்த திஸாநாயக்க பதவி விலகுவது குறித்த யோசனையை முன்வைத்தார், அந்த யோசனையை நான் வழிமொழிந்தேன்.

எவ்வித பிரிவும் இன்றி ஏகமனதாகவே நாம் அனைவரும் இணைந்து புதிய அதிகாரிகள் நியமனத்தை மேற்கொண்டுள்ளோம்.

துமிந்த திஸாநாயக்கவை போன்றே எஸ்.பி.திஸாநாயக்கவும் இந்த நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE