ஏறாவூர் – செங்கலடி பிரதேசத்தில் ஆலய குருக்கள் ஒருவரின் சடலம் மீட்பு

170

ஏறாவூர் – செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா (வயது 55) எனும் ஆலய குருக்கள் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 15 வருட காலமாக கொழும்பு – வெள்ளவத்தையிலுள்ள அம்மன் ஆலயமொன்றில் குருக்களாக பணிபுரிந்துள்ளார்.

இதன் பின்னர் ஏறாவூர் – மைலம்பாவெளி காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் இவ்வருடம் பெப்ரவரி 01ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 31ஆம் திகதி வரை குருக்களாக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் இவர் தனது மனைவியுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்து வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சகோதரி ஒருவர் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உடல் உபாதைக்கு உள்ளாகியுள்ளதால் அதுபற்றிய மன விரக்தியில் சில காலமாக கவலையுடன் காணப்பட்டதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலம் உடற் கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE