குறித்த தேர்வு குழுவின் தலைவராக கிரேம் லெப்ரோய் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சந்திக ஹத்துருசிங்க, காமினி விக்ரமசிங்க, எரிக் உபசாந்த மற்றும் ஜெரில் வுடெர்ஸ் ஆகியோர் தேர்வுக் குழுவின் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுபயண தெரிவாளராக சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட தெரிவுக்குழு உறுப்பினர்களின் சேவைக் காலமாக கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் ஒரு வருட காலம் என தீர்மானிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.