ஏறாவூர் சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை ஏறாவூர் ஆற்றங்கரை செய்னுலாப்தீன் ஆலிம் லகூன் பூங்காவில் ஒன்றியத்தின் தலைவர் பாறூக் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் ஒன்றியத்தின் பிரதித் தலைவரும், மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட விசாரணை அதிகாரியுமான ஜனாப் ஐ.எம்.தஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபைத் தலைவர் வாசித் அலி, நகரசபை உறுப்பினர்களான றியாழ், நிசார், ஏறாவூர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் நஜிமுதீன், ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் உட்பட புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
விசேட துவா பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.