அமைச்சர் மனோ கணேசனுடன் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு 

184

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அமைச்சின் அலுவலத்தில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரில் சந்தித்தாா்.

அப்போது பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அவ் விடயங்கள் அனைத்தையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதி அளித்தாா்.

நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா மற்றும் ஜனநாயக தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் இராஜேந்திரன் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினாா்.

தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில், பல விடயங்களில் அம்பாறை தமிழ் மக்கள்  புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். அமைச்சர்கள் தன்னிச்சையாக தமது இனம் சார்ந்த பகுதிகளில் மாத்திரம் அபிவிருத்தி செய்கிறார்கள். குறிப்பாக அண்மையில் சுகாதார பிரதி அமைச்சர் செயற்பட்ட விதம் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்தி கவலைக்குரியது. திட்டமிட்டு தமிழப்பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுவருகின்றது என்றார்.

அதற்கு அமைச்சர்  உரிய  ஆலோசனைகளை வழங்கியதோடு எதிர்காலத்தில் அங்கு இடம்பெறும்  செயற்பாடுகளுக்கு உதவியளிப்பதாகக் கூறினார்.

SHARE