இலங்கையின் முதன்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு இலவசமாக வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7ஆம் திகதி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 34 வயதான புஷ்பாகுமாரி இதயமாற்று சிகிச்சை செய்து கொண்டார்.
புஷ்பகுமாரியின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு சுவாத்தியமான வீடு ஒன்றை வழங்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் நாச்சாதுவ பிரதேச செயலார் சரத் விஜேசிங்க, உடனடியாக புஷ்பாகுமாரிக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய புதிய முழுமையான வீடு ஒன்று புஷ்பகுமாரிக்கு நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட இதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்தமை, இலங்கை வைத்தியத்துறையில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.