காத்தான்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை காத்தான்குடி ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.