இந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்புக்காக ரூபா ஐந்து இலட்சம் ஒதுக்கீடு

200

வடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான என். விந்தன் கனகரட்ணம் தனக்குரிய 2018 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் தளபாடக் கொள்வனவுகளுக்காக ரூபா ஐந்து இலட்சம் ஒதுக்கியுள்ளார்.
கிறிஸ்தவ ஆலயங்களின் பங்குத்தந்தையர்களும் இந்து ஆலயங்களின் தலைவர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களை தமது ஆலயங்களுக்கு அழைத்து ஆலயங்களின் தேவைகள் பற்றியும் புனரமைப்புப் பற்றியும் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. என்.விந்தன் கனகரட்ணம் அவர்கள் இந்நிதியை குறித்த ஆலயங்களுக்கென ஒதுக்கியுள்ளார்.

யாழ் அடைக்கல அன்னை (OLR) தேவாலயம் கணினி மற்றும் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா இரண்டு இலட்சம், அரியாலை நாவலடி முதலாம் குறுக்கு அம்மன் வீதி, ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம் புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், பாண்டியந்தாழ்வு, கொழும்புத்துறை வீதி அருள்மிகு ஸ்ரீநரசிம்ம ஞானவைரவர் தேவஸ்தானம் புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், அரியாலை நாவலடி, கோட்டை விநாயகர் வீதி அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் ஒலிபெருக்கி சாதனங்கள் கொள்வனவுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம் மற்றும் கூத்தன் கலட்டி, வேலணை கிழக்கு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில் புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம் என ஐந்து இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE