ராஜிவ் கொலையாளிகள் விடுதலை: சட்ட அமைச்சர் சண்முகம் கருத்து

174

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, ராஜிவ் கொலையாளிகள் வழக்கு தீர்ப்புக்கு பின்னரே, அரசால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்,” என, சட்ட அமைச்சர், சண்முகம் கூறினார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பேசிய தமீமுன் அன்சாரி, பல ஆண்டுகளாக, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு, கோவை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 30 கைதிகளை, அரசு விடுதலை செய்ய வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களையும் விடுவிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

அவரது கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய சட்ட அமைச்சர் சண்முகம்,

கைதிகளை விடுவிப்பதற்கு, மத்திய அரசால், சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறையில் இருந்து வெளியே செல்லும் அவர்களை, குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு, வெளியில் அச்சுறுத்தல் இருக்கக் கூடாது.அவர்களால், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது. அவர்கள் விடுதலைக்கு, போலீசார் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது. இந்த விதிமுறைகள் பொருந்தினால் மட்டுமே, கைதிகள் விடுவிக்கப்படுவர்.

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர், விடுதலை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கின் தீர்ப்பிற்கு பிறகே, அரசால் அடுத்த கட்ட முடிவு எடுக்க முடியும்.என்றார்.

 

SHARE