
இதில், 21வது குரோமோசோமில் ஏற்படும் கோளாறால், பிறவியிலேயே ஏற்படுவது, ‘டவுன் சிண்ட்ரோம்’ எனப்படும், மரபியல் கோளாறு.
இந்த குறையுடன் பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மனக் கோளாறுடன் இருக்கும். 700 – 800 குழந்தைகளில் ஒரு குழந்தை, இது போன்ற குறைபாடுடன் பிறக்கிறது.
கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில், அதாவது, 12 – 13 வாரங்களில், ரத்தப் பரிசோதனையும், என்.ஐ.பி.டி., எனப்படும், ‘ஸ்கேன்’ பரிசோதனையும் செய்வதன் மூலம், கர்ப்பத்தில் உள்ள கரு, டவுன் சிண்ட்ரோம் குறையுடன் பிறக்க வாய்ப்புகள் உள்ளதா என்பதை, 99.9 சதவீதம் துல்லியமாக அறிய முடியும்.
எனவே, 37 வயதிற்கு மேல் திருமணம் செய்பவர்கள், மரபியல் குறைபாடு உள்ள குடும்பத்தில் இருப்பவர்கள், அவசியம் இந்த பரிசோதனையை செய்வது நல்லது.
கர்ப்பத்திற்கு திட்டமிடுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், தினமும் ஒரு போலிக் ஆசிட் மாத்திரை சாப்பிட்டு வந்தால், பிறக்கும் குழந்தைக்கு மூளை, முதுகுத்தண்டு தொடர்பான பிரச்னைகள் இல்லாமல் இருக்கும்.