டக்ளஸுக்கு ரூபா 2 மில்லியனை உதயன் பத்திரிகை இழப்பீடாக வழங்கவேண்டும் – யாழ்.நீதிமன்று தீர்ப்பு

144

 

உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை நிறுவனத்தை 2 மில்லியன் ரூபா இழப்பீட்டை அவருக்கு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

“நாடாளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையை திரிபுபடுத்தி, அவரால் குறிப்பிடப்படாத எனது பெயரை சுட்டிக்காட்டி உதயன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டது.

அந்த உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டதால் எனக்கு சமூகத்தில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. அதற்காக 200 மில்லியன் ரூபா தொகையை உதயன் பத்திரிகை மன நஷ்டமாக எனக்கு வழங்க வேண்டும்” என்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது உதயன் பத்திரிகை நிறுவனம் சார்பில் எவரும் முன்னிலையாக நிலையில் ஒருமுக விளக்கமாக மன்றினால் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விளக்கம் நிறைவடைந்து மனுதாரரின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

SHARE