பல மென்பொருள் வடிவமைப்பாளர்களைக் கொண்ட முன்னணி நிறுவனத்தை வாங்குகின்றது மைக்ரோசொப்ட்

208

பிரபல்யமான பல மென்பொருள் வடிவமைப்பாளர்களைக் கொண்ட GitHub Inc நிறுவனத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் வாங்கவுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தி வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒன்பது மாதங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இரு நிறுவனங்களும் உடன்படிக்கைக்கு வந்துள்ளன.

இதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பணியாளர்களுடன் GitHub Inc பணியாளர்களையும் இணைத்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

GitHub Inc நிறுவனம் சான்பிரான்ஸிஸ்கோவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE