தடுமாறும் இலங்கை; வலுவில் மேற்­கிந்­தியத் தீவுகள் 

193

இலங்கை மற்றும் மேற்­கிந்­தியத் தீவுகள்  அணிகளுக்கிடையிலான முத­லா­வது டெஸ்ட் போட்டி நேற்­று­ முன்தினம் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்­ப­மா­னது. போர்ட் ஒவ் ஸ்பெயின் நகரில் நடை­பெற்றுவரும் இப் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்­ட­நேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி அங்கு மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­கி­றது. இத் தொடரின் முதல் போட்டி தற்­போது நடை­பெற்­று­வ­ரு­கிறது.

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்தார். அதன்­படி அந்த அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக கிரெய்க் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் கள­மி­றங்­கினர்.

இரு­வரும் விரைவில் ஆட்­ட­மி­ழந்­தனர். அடுத்து கள­மி­றங்­கிய பாவெல் 38 ஓட்­டங்­க­ளையும் ஷாய் ஹோப் 44 ஓட்­டங்­க­ளையும் ரோஸ்டன் செஸ் 38 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஆட்­ட­மி­ழந்­தனர். அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் 40 ஓட்­டங்­க­ளுடன் வெளியேறினர்.

தொடர்ந்து கள­மி­றங்­கிய ஷேன் டாவ்ரிச் ஓர­ளவு தாக்­குப்­பி­டித்து ஆடினார். இதனால் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்­ட­நேர முடிவில் 84 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 246 ஓட்டங்களை எடுத்­தி­ருந்­தது.

இந் நிலையில் 246 ஓட்டங்களுடன் நேற்று இரண்டாம் நாள் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களை  இழந்து 414 ஓட்டங்களை குவித்து தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இந்த  இன்னிங்ஸில் ஷேன் டாவ்ரிச் 125 ஓட்டங்களுடன் ஆட்மிழக்காது இருந்தார்.

இலங்கை அணி சார்­பாக பந்­து­வீ­சிய லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் ஒரு விக்கெட்டையும்  வீழ்த்தினர்.

இந் நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் ஆர்பித்த இலங்கை அணி ஆட்ட நேர முடிவின்போது மூன்று விக்கெட்டுக்களை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் 3 ஓட்டங்களுடனும் ரோஷான் சில்வா ஒரு ஓட்டத்தையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

SHARE