வன்னி பெரு நிலப்பரப்பானது தமிழீழ விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு பின் பல்வேறு வகையான அரசியல் களங்களையும் அரசியல்வாதிகளையும் கண்டுள்ளதுடன் வன்னி வாழ் மக்களும் அழுத்துப்போய் உள்ளனர்

வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வன்னியில் ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்களின் கையே கடந்த கால தேர்தல்களில் இருந்தது இதில் 2013 மாகாணசபை தேர்தலிலும் 2015 நாடாளுமன்ற தேர்தலிலும் சற்று பின் தள்ளப்பட்டு தமிழரசு கட்சியின் கை ஓங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது
இதேவேளை வவுனியா மக்களையும் சரி ஒட்டு மொத்த வன்னி மக்களையும் சரி இலகுவாக ஏமாற்றலாம் அல்லது பணத்திற்கு வசப்படுத்தலாம் என நினைத்து பண முதலைகளும் பெரும் வர்த்தகர்களும் தேர்தல் களத்தில் குதித்தனர் அவர்கள் நினைத்தது போலவே 2015 நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளால் பெரியளவிலான வர்த்தகம் செய்யும் வர்த்தகர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு சென்றார் என்பதும் யாவரும் அறிந்ததே
இதனை அவதானித்த தெற்கு அரசியல்வாதிகளுக்கும் இப்பொழுது வவுனியா மேல் கண் வீழ்ந்துள்ளது தாமும் எம்மக்களை ஏமாற்றி சொற்பவாக்குகளால் நாடாளுமன்றம் செல்லலாம் என பகல் கனவுடனும் இங்கிருக்கும் பணத்திற்காக எதையும் செய்ய கூடிய கொள்கையில்லா சில பிராணிகளின் துணையுடன் களமிறங்க ஆரம்பித்துள்ளனர்
இந்த வகையில் இப்பொழுது களமிறங்கியுள்ளார் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சரும் மகிந்தவின் சகாவுமான பிரபாகனேசன் இவர் பிரதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வவுனியாவிற்கு என்ன செய்தார்? வவுனியா மக்கள் எத்தனை பேருக்கு இவரை தெரியும்?
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்டவர் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியில் தேர்தல் கேட்டு பாராளுமன்றம் சென்ற பின்னனர் மகிந்தவிடம் பாரிய பணத்தை பெற்று மகிந்த பக்கம் தாவியதுடன் மட்டுமல்லாமல் தனது சொந்த அண்ணனான மனோ கனேசனை நேரடியாக எதிர்த்து அவருக்கு எதிரான சதிகளில் ஈடுப்பட்டிருந்தார் மேலும் கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது கொழும்பில் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வியடைந்த இப்படி பட்ட பிரபா கனேசன் வவுனியாவில் களமிறங்க காரணம் என்ன? அல்லது இவர்தான் வவுனியா மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்கப் போராரா?
மகிந்தவுடன் இருந்து கொண்டே மைத்திரியிடம் பணம் பெற்றுகொண்டு மைத்திரிக்கு ஆதரவு வழங்கியதாகவும் இவர் மீது தெற்கில் சிலர் குற்றம் சுமத்துகின்றனர் இவருக்கும் வவுனியாவிற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை சற்று சிந்தியுங்கள் மக்களே எதுகுமே இல்லாமல் எந்த துணிவில் வவுனியாவில் கால் பதிக்கிறார்? சிங்கள அரசின் கைகூலியாக எமது வாக்குகளை பிளவு படுத்தவா? அல்லது எமது மக்களுக்குள் பிரிவினைகளை கொண்டுவந்து அதில் சிங்கள அரசுக்கு இலாபம் பெற்று கொடுக்கவா? அல்லது இங்கிருக்கும் கொள்கையில்லா சில பிராணிகள் தமது பணப்பையை நிரப்ப இவருக்கு ஆசைவார்த்தைகள் கூறி வரவழைத்துள்ளனரா? என்று பல கேள்விகள் எழுகின்றது
பொறுத்திருந்து பார்ப்போம் யார் அந்த பிராணிகள் என்று எதிர்வரும் 17ம் திகதி வவுனியாவில் பிரபாகனேசனின் காரியாலயம் திறக்கப்படவுள்ளது என அறியப்படுகிறது அப்போது பார்ப்போம் யார் அந்த பிராணிகள் என்று, பிரபாகனேசன் என்பவரை விட எம்மக்களை யாரை வைத்து என்றாலும் ஏமாத்தி பிழைப்பு நடத்தலாம் என சிந்திக்கும் இவர்களை தான் நாம் முதலில் அடையாளம் கண்டு எமது சமூதாயத்திலிருந்து புறந்தள்ளிவைக்க வேண்டியவர்கள்
ஏற்கனவே வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனுள்ளும் கட்சிகளுக்குள் மோதல்,EPDP,தமிழ் தேசிய மக்கள் முன்னனி, தமிழர் விடுதலை கூட்டணி , சிறிரெலோ,ஈரோஸ்,என வவுனியாவில் உள்ள முக்கிய சில அரசியல் கட்சிகள் உள்ளன இவற்றில் சிலர் தனியாகவும் கூட்டாகவும் தேசிய கட்சிகளுடன் இணைந்தும் தேர்தல் களங்களில் குதித்து வந்தனர் அண்மையில் புதிதாக மலையக மக்களை முன்னிலை படுத்தி புதிய ஒரு கட்சியும் ஆரம்பமாகி உள்ளது எதிர்காலங்களில் இவற்றுடன் முதல்வர் விக்னேஸ்வரன் தலமையிலான புதிய கட்சியும் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன எனவே இங்கிருக்கும் இவர்களைவிட எங்கிருந்தோ வந்து எம்மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் காண விரும்பும் பிரபா கனேசன் போன்றோரை வவுனியாவிலிருந்து விரட்டியடிப்பதனூடாக எதிர் காலங்களில் வவுனியா மக்களை ஏமாற்றலாம் என நினைக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இது ஓர் முன்னுதாரணமாக இருக்கட்டும்.
இளைஞர்களே நாளைய வன்னி உங்கள் கையில்……….