அமைச்சரின் பெயரை மறைக்க அரசாங்கம் கடும் பிரயத்தனம்?

174

சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான மென்டிஸ் டிஸ்டிலிரிஸ் நிறுவனத்திடமிருந்து ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பணம் பெற்றுக் கொண்ட சம்பவத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளனர்.

சுஜீவ பணம் பெற்றுக் கொண்ட விவகாரம் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்த வேண்டாம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

இந்த அழுத்தங்களை கண்டு கொள்ளாது சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் கடந்த 7ம் திகதி சுஜீவ சேனசிங்க பணம் பெற்றுக் கொண்ட விடயம் குறித்து நீதிமன்றில் அம்பலப்படுத்தியிருந்தனர்.

சுஜீவ சேனசிங்க, பேர்பச்சுவல் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் முப்பது லட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விடயத்தை அம்பலப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அதிகாரிகளுக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்துள்ளனர்.

கடுமையான அழுத்தங்கள் காரணமாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகளிலிருந்து விலகிக் கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர் என தெற்கின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

SHARE