அதிகரித்து வரும் டெங்கு நேயினைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையினால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டம் கட்டமாக சிரமதானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் 09.06.18 அன்று மட்டக்களப்பு கருவேப்பங்கேணி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இச்சிரமதான நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகரசபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வீடுகளுக்கும் சென்று பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மக்களுக்கு மேற்படி விடயம் தொடர்பில் மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட குழுவினரால் ஆலோசனைகள், நெறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
.