தேசிய அரசாங்கத்தின் புதிய இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 பிரதியமைச்சர்கள் பதவியேற்புக்குத் தயார்

179

தேசிய அரசாங்கத்தின் புதிய இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 பிரதியமைச்சர்கள் ஆகியோர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் மானப்பெரும, நளின் பண்டார, ரஞ்சித் அலுவிஹார, எட்வர்ட் குணசேகர, லக்கி ஜெயவர்தன, புத்திக பத்திரன ஆகியோரே சந்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா, தொழிற்துறை மற்றும் வர்த்தக நடவடிக்கை, மாநகர மற்றும் மேல் மாகாண நகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளுக்காகவும், மேலும் ஒரு பிரதி அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

SHARE